ஊன் கலந்து உயிர் கலந்து: மகான்களின் வாழ்வில்

வடலூர் வள்ளலார் என்று அழைக்கப்படுகின்ற ராமலிங்கர் சிறுவயதில் பள்ளிக்கூடம் செல்ல மறுத்துவிட்டார்.  ராமலிங்கருக்கு கல்வியில் நாட்டம் இல்லையே தவிர பக்தியில் ஈடுபாடு உடையவராக இருந்தார். தனது ஒன்பதாவது வயதிலேயே முருகப் பெருமான் மீது பக்திப் பனுவல்களைப் பாடத் துவங்கினார்.

அவருடைய அண்ணன் சபாபதி பிள்ளை வாரம்தோறும் சென்னை முத்தியால்பேட்டையில் புராணச் சொற்பொழிவாற்றி வந்தார். ஒருவாரம் உடல்நலம் சரியில்லாததால் அவரால் செல்ல இயலவில்லை. அன்று திருஞானசம்பந்தர் வாழ்க்கை வரலாறு சொல்ல வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.  அப்போது அவரது மனைவி ராமலிங்கரை அனுப்பி வைக்கலாமே என்று ஆலோசனை கூறினார். அதை ஏற்றுக்கொண்ட சபாபதிபிள்ளை, திருஞானசம்பந்தரின் இரண்டு  பாடல்களைப் பாடி அதற்கு விளக்கம் சொல்லி விட்டு வா” என்று தனது தம்பியை அனுப்பி வைத்தார். ராமலிங்கரும் தயக்கத்துடனே ஏற்றுக்கொண்டு கூட்டத்திற்குச் சென்றார். அங்குள்ளோர் இந்தச் சின்னஞ்சிறு பையனால் என்ன பேசமுடியும் என்று தயங்கிக் கொண்டே பேசுமாறு வேண்டினர்.

பற்றி இரண்டு மணி நேரம் பேசினார். பொதுவாக சொற்பொழிவாளர்கள் ஊர்க்கதைகளை எல்லாம் பேசி, ஜோக் அடிக்கிறேன் என்று சொல்லி தாங்கள் படித்ததை அப்படியே ஒப்பிப்பர். ஆனால் ராமலிங்கரோ, பக்திப் பாடல்களை ஊன் கலந்து, உயிர் கலந்து பாட வேண்டும் என்ற இலக்கணத்தை அறிமுகப்படுத்தினார். அவரின் பக்திப் பிரவாகத்தை பார்த்த மக்கள் இனி உங்கள் அண்ணனுக்கு பதிலாக நீங்களே பிரசங்கம் செய்யுங்களேன்” என்றனர்.

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்.

அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்.