அறிமுகம்

விஜயபாரதம்

அன்புடையீர், வணக்கம்.

விஜயபாரதம் வார இதழ் கடந்த 40 ஆண்டுகளாக சென்னையில் இருந்து வெளிவருகிறது.

ஒவ்வொரு இதழிலும்…

ஹிந்து என்பதில் பெருமிதம் என்ற உணர்வு அனைவரிடமும் உறுதி பெறவும், நல்லதொரு ஹிந்து குடும்பம் எவ்வாறு திகழ வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களும்…

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்… அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள் என்ற முத்தாய்ப்போடு வாரம் தோறும் ஒரு மகானின் வாழ்க்கை சம்பவம்…

பாவம் செய்யாமல் இருப்பதற்கு என்ன வழி?

நம்முடைய ஒவ்வொரு செயலையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் நம் அருகிலேயே இருக்கிறார். நம் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களைக் கூட அவர் அறிவார் என்ற நினைப்பு எப்போதும் இருந்தாலே, நாம் பாவம் செய்யத் தயங்குவோம்.

– இது போன்ற கேள்விகளும், அதற்கான நச் என்ற பரதனாரின் பதில்களும்…

காஷ்மீர் முதல் குமரி வரை பாரதம் ஒரே நாடு, ஒரே மக்கள் என்பதை வலியுறுத்தும் படைப்புகளும், தேச விரோத பிரிவினைவாதிகளின் முகமூடிகளைக் கிழித்தெறியும் கட்டுரைகளும்…

ஹிந்து அனைவரும் சோதரர்கள்

ஹிந்து எவருமே தாழ்ந்தவராகார்

ஹிந்து காப்பது என் விரதம்

சரிசமானமே என மந்திரம்

– என்று ஹிந்து ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தும் உன்னத சிந்தனைக் கருத்துகளும்…

தமிழகம் ஆழ்வார்களும், நாயன்மார்களும் அவதரித்த தெய்வீக பூமி. தமிழ்ப் பண்பாடுதான் ஹிந்து பண்பாடு… ஹிந்துப் பண்பாடு தான் தமிழ்ப் பண்பாடு. ஹிந்துதான் தமிழன்… தமிழன் தான் ஹிந்து என்று ஓங்கி ஒலிக்கும் சரித்திர சான்றுகளும்…

அந்நிய மதத்தினர் ஏழை, எளிய அப்பாவி ஹிந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றி வருகிறார்கள். இதனால் ஹிந்துக்களின் ஜனத் தொகை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. நான் ஹிந்துவாகப் பிறந்தேன்… ஹிந்துவாக வாழ்வேன்… ஹிந்துவாகவே மடிவேன் என்ற உணர்வை ஒவ்வொரு ஹிந்துவின் உள்ளத்திலும் பசுமரத்து ஆணி போல பதியவைக்கவும்…

வாரம் தோறும் விஜயபாரதம் உண்மைகளை உரைத்து வருகிறது.

ஒரு வேண்டுகோள்

ஒவ்வொரு ஹிந்து குடும்பமும் அவசியம் படிக்க வேண்டிய பத்திரிகை விஜயபாரதம். எனவே தாங்கள் விஜயபாரதத்தின் சந்தாதாரர் ஆக வேண்டுகிறோம்.

 – நிர்வாகி, விஜயபாரதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *