உள்துறை அமைச்சர் மீது சி.பி.ஐ விசாரணை

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், வர்த்தகர்களிடம் இருந்து மாமூலாக மாதம் 100 கோடி வசூலித்துத் தர தனக்கு அழுத்தம் கொடுத்தார் என அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் கொடுத்தார். இது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதனை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், இந்த குற்றச்சாட்டுகள் மிக தீவிரமானவை என தெரிவித்ததுடன் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் இதன் முதல் பூர்வாங்க அறிக்கையை 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது. ரிலையன்ஸ் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு வெளியே ஜெலட்டின் வெடிபொருட்களைக் கொண்ட வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது, அந்த வாகனத்தின் உரிமையாளரான மன்சுக் ஹிரென் மர்மமாக கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் மும்பை காவல்துறை அதிகாரி சச்சின் வேஸ் கைது செய்யப்பட்ட விசாரனையில் இந்த விவகாரம் வெளியானது குறிப்பிடத்தக்கது.