சீனா ஒப்புக்கொண்ட உண்மை

சீனா தனது நாட்டில் வேறு எந்த நாட்டின் கொரோனா தடுப்பூசிகளையும் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்பதுடன் மற்ற நாடுகளின் தடுப்பூசிகளை குறைகூறி வருகிறது. இந்நிலையில், சீனாவின் நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர், ஜியாவ் ஃபு, ‘சினோபார்ம், சினோவேக் அகிய சீனாவின் கொரோனா தடுப்பூசிகள் பழைய முறைகளை பயன்படுத்தியே தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் செயல்திறன் சிறப்பானதாக இல்லை. இவற்றின் செயல்திறன் 50.4 சதவீதமாக உள்ளன. மற்ற நாட்டு தடுப்பூசிகளின் செயல்திறன் 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளன. எனவே, அதனை மேம்படுத்துவதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன’ என தெரிவித்துள்ளார். அவரின் இந்த கூற்று, உலக நாடுகளின் சீன தடுப்பூசியை குறித்த சந்தேகத்தை உறுதிபடுத்துவதுடன், அதனை பயன்படுத்தும் சில நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்க நாடுகள், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு தனது தடுப்பூசிகளை சீனா அதிக அளாவில் ஏற்றுமதி செய்துவருகிறது. மேலும், சீனாவில் இதுவரை 3.4 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும், 605 கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.