தடுப்பூசி தமிழகம் முதலிடம்

தடுப்பூசி திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு அளித்த பதிலில் 41 லட்சம் கூடுதல் டோஸ்கள் குப்பிகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதில் அதிகபட்சமாக தமிழகம் 5.88 லட்சம் கூடுதல் டோஸ்களை எடுத்து பயன்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் 4.87 லட்சம் டோஸ்கள், குஜராத் 4.62 லட்சம் கூடுதல் டோஸ்களையும் பிரித்தெடுத்து செலுத்தியுள்ளன. பீகாரில் அதிகபட்சமாக 1.26 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து வீணடிக்கப்பட்டது. இது நாட்டில் வீணடிக்கப்பட்ட அளவில் பாதி அளவு என தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கான ரூ. 35,000 கோடி பட்ஜெட்டில், தடுப்பூசி கொள்முதலுக்கு ரூ. 8071 கோடி, செயல்பாட்டு செலவுகளுக்காக 1,654.15 கோடி என இதுவரை ரூ. 9725.15 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2021 டிசம்பர்வரை 100.6 கோடி டோஸ்களுக்கான ஆர்டர்கள் தரப்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2021 டிசம்பருக்குள் தடுப்பூசி போடமுடியும் எதிர்பார்க்கிறோம். உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆர்டர்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.