மீண்டும் லாட்டரி சீட்டா?

கருணாநிதி தமிழக‌ முதல்வராக இருந்தபோது, தனியாரை நுழையவிட்டு லாட்டரி சீட்டு திட்டத்தை‌ சீரழித்தார்‌. வெளிமாநில லாட்டரிகள்‌‌ அனுமதிக்கப்பட்டது. மக்களிடையே பேராசை தூண்டப்பட்டது. இதனால், லாட்டரி சீட்டு தமிழகத்தில்‌ சூதாட்டமாக மாறியது. தனியார்‌ லாட்டரி ஏஜெண்ட்டுகள்‌, வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை கள்ள நோட்டுகளைப் போல‌ அச்சிட்டு மக்களிடம்‌ விற்றார்கள்‌. இதனால் அப்பாவி ஏழை, எளிய மக்கள்‌ தங்கள்‌ குடும்பத்தையும்‌, வாழ்வையும்‌ இழந்தார்கள்‌. பல அப்பாவிகள்‌ தற்கொலை செய்துகொண்டனர். இதனையடுத்து கடந்த 2003ல் தமிழகத்தின்‌ ஏழை, எளிய மக்களைக்‌ காப்பாற்ற, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா லாட்டரி சீட்டை ஒழித்தார். ஆனால், தற்போதுள்ள தி.மு.க அரசு அதனை மீண்டும்‌ கொண்டு வர நினைக்கிறது.அப்படி கொண்டுவந்தால் தமிழக மக்களின்‌ மிகப்‌ பெரிய எதிர்ப்பை‌ ஸ்டாலின்‌ சந்திக்க நேரிடும்‌. எனவே, லாட்டரி சீட்டை மீண்டும்‌ இந்த அரசு கொண்டு வர முயற்சிக்க வேண்டாம் என்று தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.