வழிகாட்டும் ரவீந்திர ஜடேஜா

பாரதத்தை சேர்ந்த முன்னணி கிரிக்கெட் விளையாட்டு வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்தவருமான சுரேஷ் ரெய்னா, தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் ஒரு போட்டியின்போது கருத்துத் தெரிவிக்கையில், தன்னை ஒரு பிராமணர் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். இதனால் இடதுசாரி ஆதரவாளர்களால் அவர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். கிண்டலுக்கு ஆளானார். இதற்கு பதிலடி தரும்விதமாக வரது நண்பரான பிரபல கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா, தற்போது வரவிருக்கும் டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்து சுற்றுப் பயணம் குறித்த தனது டுவிட்டர் பதிவில், அவர் தன்னை ‘என்றும் பெருமைமிக்க ரஜபுத்திர இளைஞன்’ என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

‘தொடர்ந்து பல காலமாகவே, சமூக ஊடக தளங்களில் இடதுசாரிகளும், திராவிட கட்சிகளும் ஹிந்துக்கள் தங்கள் ஜாதி மற்றும் ஹிந்து அடையாளத்தை வெளிப்படுத்துவதை ஏளனம் செய்து வருகின்றன. இதனை கண்டு பயந்து நமது அடையாளத்தை மறைத்துக்கொள்ளத் தேவையில்லை, மதம் மாறத் தேவையில்லை, அவர்களை ஊக்குவிக்கும் விதமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. மாறாக நாம் நமது அடையாளத்தை தைரியமாகவும் பெருமையாகவும் வெளிப்படுத்துவது ஒன்றுதான் இவர்களை எதிர்கொள்ள சரியான வழி என வழிகாட்டியுள்ளார் ஜடேஜா’ என நெட்டிசன்கள் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.