சரணடைந்த குற்றவாளிகள்

சில மாதங்களுக்கு முன், கர்நாடகா, மங்களூருவில் உள்ள சிவபெருமானின் அவதாரமாகக் கருதப்படும் கோரகஜ்ஜா  கோயிலில் சில மர்ம ஆசாமிகள், சிறுநீர் கழித்தும் கோயில் உண்டியலில் ஆணுறைகள் போட்டும் சென்றுள்ளனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல், காவல்துறை திணறியது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் மங்களூ, ஜோகாட்டே பகுதியைச் சேர்ந்த, ரஹீம், தௌபீக் என்ற இருவர் அந்த கோயிலுக்கு வந்து வெகு நேரமாக நின்றுக்கொண்டிருந்தனர். பிறகு கோயில் பூசாரியிடம் பேசிய அவர்கள், தாங்கள்தான் அந்த தவறினை செய்தோம் என கூறி அழுது மன்னிப்பு கேட்டுள்ளனர். பிறகு பக்தர்களால், இருவரும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பிறகு, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட முக்கியக் குற்றவாளியான இவர்களின் நண்பன் நவாஸ், இந்த செயலுக்கு பிறகு, பைத்தியக்காரத்தனமாக செயல்படத் தொடங்கினான். பின்னர் அது, ரத்த வாந்தி, வயிற்றுப்போக்காக மாறியது. கடைசியாக, நவாஸ் தனது தலையை ஒரு சுவரில் முட்டிக்கொண்டு இறந்தார். அப்போது அவன், ‘கோரகஜ்ஜா பகவான் குற்றவாளிகளான நம் மீது கோபமாக இருக்கிறார்’ என்பதை தன் கடைசி வார்த்தைகளாகக் கூறிவிட்டு இறந்தார். இது இருவரையும் அச்சத்திற்குள்ளாக்கியது. பின்னர் இவர்களுக்கு ரத்த வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டதால், குற்றத்தை ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கோரினால் மட்டுமே காப்பாற்றப்படுவோம் என நம்பி சரணடைந்துள்ளனர்.