மோடியை பாராட்டும் சௌதி

ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து வரும் மேம்பாட்டு முயற்சிகளை சௌதி அரேபியாவின் முக்கிய தினசரியான ‘சௌதி கெசட்’ பாராட்டியுள்ளது. மேலும், ‘சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது, ஜம்மு காஷ்மிர் யூனியன் பிரதேசமாக்கப்பட்டது, அதில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான முயற்சிகள் போன்றவற்றால், இந்த பிராந்தியம் நிச்சயமற்ற தன்மையிலிருந்து வெளியேறி முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைக்கிறது. இதனால் காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது. கல்வீச்சு சம்பவங்கள் குறைந்துள்ளன’ என பாராட்டியுள்ள சௌதி கெசட், ‘பாகிஸ்தான் தூண்டுதலின் பேரில், மக்களுக்கு நல்லது செய்யும் அரசுக்கு எதிராக பயங்கரவாதிகளும் பிரிவினைவாதிகளும் பினாமி போர் நடத்த தவறாக வழிநடத்தப்படுகின்றனர்’ என கூறியுள்ளது.