மக்களை தேடி தடுப்பூசி

பாரதத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா பயத்தில் இருந்து தேசமே விடுதலை பெற வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு நமது மத்திய அரசு செயல்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, வரும் ஏப்ரல் 11 முதல், தேசம் முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் போன்ற பணியிடங்களுக்கு நேரடியாகவே சென்று கொரோனா தடுப்பூசியை போட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனைத்திலும், 45 வயதிற்கு மேற்பட்ட சுமார் 100 தகுதியான பயனாளர்களைக் கொண்ட பொது மற்றும் தனியார் பணியிடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.