ஆளும் கட்சியின் தேர்தல் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு தேர்தல் அறிக்கை வெளியீடு என்று மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் வழக்கம் போல இலவசங்களை வரிந்து கட்டிக்கொண்டு அறிவித்து வருகின்றன. பத்தாண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இல்லாதிருந்து தற்போது அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையின் காரணமாக  எதிர்கட்சியான தி மு க மக்களை மடையர்களாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது ஆளும் கட்சியும் அதற்கு போட்டியாக பல்வேறு இலவசங்களின் அறிவிப்பை வெளியிட்டு ஆர்பரிக்கின்றது .ஏற்கனவே மாநிலத்தின் கடன் சுமை  எழு லட்சம் கோடியை தாண்டியுள்ள நிலையில் இந்த இலவங்கள் குறித்த அறிப்விப்பு அவசியமா என்றால் எதிராளி பல இலவசங்களை அறிவித்து மக்களின் மனதில் ஆசையை விதைத்து ஓட்டுக்களை அறுவடை செய்ய முயலும் பொது ஆளும் கட்சியான அரசும் அதற்கு அதிகமாக சில இலவசங்களை அறிவித்து மக்களின் மனதில் கோபம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது

இந்த தேர்தலில் ஆளும் கட்சியின் அணிவகுக்கும் இலவச அறிவிப்புகள்

சொந்தமாக  வீடு இல்லாத வாக்களர்களுக்குமூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயில் அம்மா வீடுகள்

#இலவச துணி துவைக்கும் இயந்திரம்

#இலவச சோலார் அடுப்பு

#அரிசி ரேசன் கார்டுகளுக்கு ஆண்டுக்கு ஆறு இலவச காஸ் சிலிண்டர்

#அனைத்து குடும்ப அட்டைதரர்களுக்கும் மாதம் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்

#மாணவர்களுக்கு கல்விக்கடன் தள்ளுபடி

விலையில்ல அரசு கேபிள் இணைப்பு ஆண்டுக்கு இரண்டு கொசுவலைகள்

விவசயிகளுக்கு ஆண்டுக்கு ஏழாயிரம் ரூபாய் மானியம்

முதியோர் ஆதரவற்றோர் உதவித்தொகை  ஆயிரத்திலிருந்து இரண்டாயிரமாக உயர்வு

#கூட்டுறவு வங்கியில் ஐந்து பவுன் வரையில் அடகுவைத்து பெற்றுள்ள  கடன்களை ஏற்கனவே தள்ளுபடி

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை

நூறுநாட்கள் வேலை திட்டம் நுற்று ஐம்பது நாளாக அதிகரிப்பு.

#தனியார் பள்ளி ஆச்சிரியர்களுக்கும் ஊதியத்தை அரசே நிர்யனிக்கும்

திருமண பெண்களுக்கு அம்மா சீர்வரிசை திட்டம்

திருமணமாகும் ஏழை பட்டதாரி  பெண்களுக்கு தாலிக்கு அரை பவுன் தங்கத்துடன் ரூபாய் அறுபதாயிரம் நிதியுதவி.

திறன் வளர்ப்பு திட்டத்திற்கென மூவாயிரத்து  ஐநூறு கோடி ரூபாயில் தனி பல்கலைகழகம்.

அரசு கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மானிய விலையில்  இருசக்கர வாகனம்

நகர பேருந்துகளில் மகளிருக்கு அம்பது சதவிகித கட்டண சலுகை

ரேசன் பொருட்களை இல்லங்களை தேடிவரும் வகையில் திட்டம்

கோவை மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில்

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைகாலத்தில் ஐந்தாயிரம் ரூபாய்  இன்னும் பல வளர்ச்சி திட்டங்களுக்கான அறிவிப்புகளும் அதில் அடங்கியுள்ளன.