ஹிந்துக்களின் தேர்தல் உறுதிமொழி

ஹிந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை என்றென்றும் கொண்டது தி.மு.க. ஆண்டாளை அவமதித்த வைரமுத்து, கந்தசஷ்டியை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டம், ஹிந்துக்களை தொடர்ந்து அவமானப்படுத்தும் தி.க வீரமணி போன்றோரை தாங்கிப் பிடிக்கும் கட்சியும் தி.மு.கதான். ஹிந்துக்களையும் ஹிந்து தெய்வங்களான மதுரை மீனாட்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர், ஸ்ரீ ராமபிரான் போன்றோரை தொடர்ந்து இழிவுபடுத்தியவர் கருணாநிதி.

அவரது குடும்ப வாரிசுகளும் அவரின் வழியை பின்பற்றி ஹிந்துக்களையும் ஹிந்து தெய்வங்களையும் இழிவுபடுத்தி வருகின்றனர். திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தி இல்லையா என கேட்டவர் கனிமொழி. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருநீறை கீழே கொட்டி அவமதித்தது, ஹிந்துக்கள் என்றாலே எரிகிறது என சொன்னபோது சிரித்து அதனை ஆமோதித்தது, ஹிந்துக்களின் திருமண சடங்கை கொச்சைப்படுத்தி பேசியது என எண்ணிலடங்காத முறை ஹிந்துக்களை கேவலப்படுத்தியவர் ஸ்டாலின். அவரது மகன் உதயநிதியும் ஹிந்துக்களை கொச்சைப்படுத்தத் தவறவில்லை. ஆனால், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்களுக்கு செல்வதும், அங்கு ஆசி பெறுவதும், வழங்கப்படும் பொருட்களை ஏற்றுக் கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர் இவர்கள்.

இதனால் ‘தேர்தல் உறுதிமொழி’ என்ற தலைப்பில், தி.மு.கவுக்கு எதிராக ஓட்டளிக்க வலியுறுத்தி, ஹிந்து தெய்வங்களின் படங்களுடன், ஹிந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் பல்வேறு மாவட்டங்களில் வீடுகள் தோறும் துண்டு பிரசுரங்களை வினியோகித்து வருகின்றனர். மேலும், வாட்ஸப், முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் இந்த பிரச்சாரங்கள் பொதுமக்களால் வேகமாக பரப்பப்பட்டு வருகின்றன.