செய்தியும் உண்மையும்

‘மும்பை சர்வதேச விமான நிலையத்தின் 74 சதவீதம் பங்குகளை வாங்கியது அதானி நிறுவனம்’ என்ற செய்தி வெளியானதும் வழக்கம்போல சில சார்பு ஊடகங்களும் எதிர்கட்சிகளும், மோடி இந்தியாவை அம்பானிக்கும் அதானிக்கும் விற்றுவிட்டார் என குதித்தன. ஆனால் உண்மையில் அதானி நிறுவனம் மும்பை சர்வதேச விமான நிலையத்தின் 74 சதவீத பங்குகளை பாரத அரசிடம் இருந்து வாங்கவில்லை. கடந்த 2006ல் காங்கிரஸ் அரசால் தென் ஆப்பிரிக்க நிறுவனமான ஏ.சி.எஸ்.ஏ, மொரிஷியஸ் நிறுவனமான பிட்பெஸ்ட் என்ற இரு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்ற மும்பை விமான நிலையத்தின்  பங்குகளைதான் வாங்கியுள்ளது அதானி நிறுவனம்.

இதேபோல கடந்த 2013ல் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு சட்டம் இயற்றி வெளிநாட்டு வால்மார்ட், டெஸ்ஸா நிறுவனங்களுக்கு பாரதத்தின் சில்லறை வணிகத்தில் ஈடுபட வழிவகை செய்ததும் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ்தான்.

தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும், ஸ்டெர்லைட் ஆலை, ஹைட்ரோ கார்பன் போன்ற பிரச்சனைகளை கிளறி மக்களிடம் பொய் கதைகளை கூறி போராட தூண்டிவிட்டன. ஆனால் இந்த நிறுவனங்கள் தமிழகத்திற்கு வர கையெழுத்திட்டதே தி.மு.கவினர் மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சியில் இருக்கும்போதுதான் என்பதை வசதியாக மறைத்துவிட்டனர்.

இவர்கள்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட காரணமாக இருந்தவர்கள். மீனவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனையான கச்சத்தீவு பிரச்சனைக்கும் மூல காரணம் சாட்சாத் இவர்களேதான். ஆனால் தாங்கள் உடந்தையாக இருந்தவற்றை எதிர்த்தே போராடும் கைதேர்ந்த அரசியல்வாதிகள் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியினர். இப்படி இவர்கள் பாரதத்திற்கு செய்த துரோகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால், பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பதுபோல தங்களின் தவறுகளை சாமார்த்தியமாக மறைத்து அதனை ஆட்சியில் உள்ளவர்கள்தான் செய்தனர் என்ற மாயையை தங்கள் சார்பு ஊடகங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் இவர்கள். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேசமும் மக்களும் முன்னேற, உண்மையான வளர்ச்சிக்கு பாடுபடுபவர்களை மட்டுமே ஆதரிக்க வேண்டும்.