காப்பீடு சேவைகள் சட்டத் திருத்தம்

காப்பீட்டு பாலிசி சேவைகளில் உள்ள குறைகள், புகார்களை வேகமாகவும் குறைந்த செலவிலும் தீர்ப்பதற்கு ஏதுவாக காப்பீடு குறைதீர் அதிகாரிகளுக்கான 2017 சட்ட விதிகளில் மத்திய அரசு சில முக்கிய திருத்தங்களை செய்துள்ளது. இதன்படி, இனி ஆரம்பகட்ட பிரச்னைகள் மட்டுமின்றி காப்பீடு நிறுவனம், முகவர்கள், இடைத்தரகர்கள் சேவை குறைபாடுகள், தவறான பாலிசிகள் விற்பனை, உள்ளிட்ட புகார்களையும் பதிவு செய்யலாம். ஆன்லைன் வழியாகவும் புகார்களை அளிக்க முடியும். புகாரின் நிலையை அறியும் வசதி, காணொலி வழியாக விசாரணை, குறைதீர்வு அதிகாரியை தேர்ந்தெடுக்கும் வசதி, குறைதீர் அதிகாரி மாற்றுதல் போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்றைய சூழலில் இந்த சட்டத் திருத்தங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது, அவசியமானது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.