தி வயர் வெளியிட்ட போலி செய்தி

இடதுசாரிகள் ஆதரவு இணைய செய்தித் தளமான ‘தி வயர்’ போலி செய்திகள் வெளியிடுவது வாடிக்கை. அவ்வகையில் மீண்டும் ஒருமுறை போலி செய்தியை வெளியிட்டுள்ளது. இம்முறை அது, ஐ.டி சட்டத்தின் கீழ் மத்திய அரசு வெளியிட்டுள்ள டிஜிட்டல் மீடியாக்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ள 10, 11, 12ம் விதிகளில் உள்ள தவறான செய்திகளை நீக்குவது, சுய ஒழுங்குமுறை, குறைதீர் அதிகாரிகள் நியமனம், குழுத்தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம் போன்ற விஷயங்கள் குறித்து தவறான செய்தியை திட்டமிட்டே வெளியிட்டுள்ளது. இதனை ‘பிரஸ் இன்பர்மேஷன் பீரோ’ கண்டறிந்து அதற்கு தகுந்த விளக்கத்தையும் அளித்துள்ளது.