மம்தாவுக்கு பா.ஜ.க கேள்வி

விரைவில் தமிழகம், கேரளா உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. சமீபத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல், பங்களாதேஷ் மக்களை சட்டவிரோதமாக குடியற்றுவது போன்ற காரணங்களால் மேற்கு வங்கத்தில் மமதா மீது மக்களின் கோபம் அதிகரித்துள்ளது. பா.ஜ.கவும் கடந்த 5 ஆண்டுகளில் பெரியளவில் அங்கு வளர்ந்துள்ளது. மமதாவின் கட்சியிலிருந்த பல பெரிய தலைவர்களும் தற்போது பா.ஜ.கவுக்கு அணி மாறிவிட்டனர். இதனால் கலக்கம் அடைந்துள்ள மமதா, “குஜராத்தைச் சேர்ந்தவர்கள் வங்காளத்தை ஆளக்கூடாது. திரிணாமுல்தான் ஆட்சி செய்ய வேண்டும்.” என பிரிவினைவாதத்தை கையில் எடுத்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா, “முதல்வரும், அவரது மருமகனும் பா.ஜ.க.,வை வெளியாள் என்கின்றனர். ஆனால் பா.ஜ.க.,வை எதிர்க்க பிற கட்சிகளை அழைத்து வருகின்றனர். அவர்கள் வெளியாட்கள் இல்லையா?” என மமதாவிற்கு ஆதரவாக களமிறங்கியிருக்கும் அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவை சுட்டிக்காட்டியுள்ளார்.