கோவிஷீல்ட் வருகை

புனேவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு நேற்று 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டது. இதனுடன் சேர்த்து தமிழகத்திற்கு இதுவரை 55 லட்சத்து 3 ஆயிரத்து 590 கோவிஷீல்டு தடுப்பூசிகளும் 8,82,130 கோவாக்சின் தடுப்பூசிகளும் வந்துள்ளன. இன்னும் சில நாட்களில் மேலும் 2 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் வர உள்ளது.