சிறுமதி காங்கிரஸ்

கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில், பாரதம் ஒரு உண்மையான உலகத் தலைமையாக உருவெடுத்துள்ளது. தடுப்பூசிகளை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. மேலும் பல நாடுகள் வரிசையில் காத்திருக்கின்றன. இந்நிலையில், காங்கிரசின் சாகேத் கோகலே என்பவர் தன் டிவிட்டர் பதிவில், “இந்த தடுப்பூசிகள் ஏப்ரல் மாதத்தில் காலாவதியாகிறது. இதனால் யாருக்கும் பயனில்லை” என்பதாக அரைகுறை தகவல்களை பதிவிட்டிருந்தார். உண்மையில், தற்போது தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உலகிற்கு புதியவை, இது குறித்த ஆறுமாத தரவுகளே இருப்பதால் அவற்றின் ஆயுட்காலம் ஆறு மாதங்கள் என முன்னெச்சரிக்கையாக பதிவிடப்பட்டுள்ளது. எனினும் இவ்வகை தடுப்பூசிகளின் காலாவதி காலம் நீண்டது. இந்த தடுப்பூசிகள் அதன் ஒப்புதலுக்கு 8 மாதங்களுக்கு முன்பே, முன்கூட்டி தயாரிக்கவும் சேமிக்கவும் அரசாங்கத்திடம் அனுமதி பெறப்பட்டு துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.