நிதிபதிகளே இப்படியா?

கேரளா, பாலக்காடு மாவட்ட நீதிபதி கலாம் பாஷா தன் மனைவிக்கு முத்தலாக் வழங்கியதாக அவர் மனைவி குற்றம் சாட்டியுள்ளார், மேலும், அவரது சகோதரரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியுமான கெமல் பாஷா, இந்த முத்தலாக்கிற்கு  ஒப்புக்கொள்ளும்படியும் மறுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் தன்னை அச்சுறுத்தியதாக கூறியுள்ளார். கலாம் பாஷா தன் மனைவிக்கு மார்ச் 1, 2018 என தேதியிட்டு தலாக் அளித்துள்ளார். பின்னர் ஆகஸ்ட் 2017ல் அரசு முத்தலாக்கை தடை செய்ததை உணர்ந்த அவர், சட்டத்தில் இருந்து தப்பிப்பதற்காக உடனேயே மார்ச் 1, 2017 என மறு தேதியிட்டு அந்த தலாக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.