ஆல்கஹாலுக்கு ஹலால்

கேரளாவில் ஆல்கஹால் தயாரிப்புக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை ஹிந்து ஐக்கியவேதி தலைவர் கே.பி.சசிகலா தன் சமூக வலைதளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். பாரதத்தில் இருந்து மத்திய கிழக்கு உட்பட பல்வேறு நாடுகளுக்கு எதில் அசிடேட் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் இவைகளுக்கு உணவு, மருந்து சான்றிதழ் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் தற்போது இந்த நாடுகள் இவைகளுக்கு ஹலால் சான்றிதழ் அவசியம் என வலியுறுத்துகிறது. மது அருந்துதல் முஸ்லிம்களின் மத கொள்கைக்கு விரோதமானது. பல முஸ்லிம் நாடுகளில் மதுவுக்கு தடை உள்ளது. இந்நிலையில் 90% ஆல்கஹாலை கொண்ட ஒரு தயாரிப்பிற்கு ஹலால் சான்றிதழ் என்பது சந்தேகங்களை எழுப்புகிறது. ஹலால் சான்றிதழ் வழங்கும் நிறுவனம் அதற்கு ரூ. 50,000 வசூலிக்கிறது. இத்தொகை ரொக்கமாகவே பெறப்படுகிறது. அனைத்திற்கும் ஹலால் என்பது பொருளாதார ஜிஹாத்தின் வேறு வடிவமாகவே தெரிகிறது. சில நாட்களுக்கு முன்பு ஹலால் தயாரிப்புகளை புறக்கணிக்க கூறியதற்காக ஹிந்து ஐக்கியவேதியின் பொதுச் செயலாளர் ஆர்.வி.பாபு கேரளாவில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.