கம்யூனிச அரசின் அராஜகம்

கேரள அரசின் மலபார் தேவசம் வாரியம், ஊழியர்களை, செலவுகளைக் குறைக்குமாறு உத்தர விட்டுள்ளது. அரசாங்கம் வெளியிட்ட இந்த சர்ச்சைக்குரிய உத்தரவில், கோயில் திருவிழாக்கள், பூசாரிகளுக்கு சம்பளம், பூஜைகள், பிரசாதம் போன்றவை மாநிலத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்துகின்றன. கோயில் செலவினங்களின் அதிகரிப்பு காரணமாக ஊழியர்களுக்கு கூடுதல் அலவன்ஸ்கள் வழங்கப்படுவதில்லை என்றும் கூறியுள்ளது. ஹிந்து கோயில்கள் மீதான கேரள இடதுசாரி அரசின் நேரடித் தாக்குதலாக இது பொதுமக்களால் பார்க்கப்படுகிறது. வழக்கமான பூஜைகளில் சமரசம் செய்யமுடியாது. கோயில்களுக்கு நிதியுதவி செய்வது அரசாங்கம், தேவசம் வாரியத்தின் பொறுப்பு. அதை அரசு தட்டிக் கழிக்கக்கூடாது என்று கூறி பல்வேறு ஹிந்து அமைப்புகள், கோயில் பூஜாரிகள், பொதுமக்கள் அரசின் இந்த அராஜக உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.