அமைச்சர் மீது குண்டுவீச்சு

மேற்கு வங்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜாகிர் ஹுசைன் கொல்கத்தாவுக்கு ரயிலில் பயணிக்க, ஜாங்கிபூரில், நிம்திதா ரயில் நிலையத்திற்கு வந்தார். ரயிலை நோக்கி அவர் நடந்து செல்கையில் அவர் மீது ஒரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இத்தாக்குதலில் ஹுசைன் காயமடைந்தார். அவருக்கு ஒரு கை, காலில் தீக்காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது குண்டு வீசப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணைய தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த தாக்குதலுக்கு மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயல் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள சூழலில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டது. மேற்கு வங்கத்தில் அமைச்சர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது’ என பா.ஜ.க மாநிலத் தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.