மகான்களின்  வாழ்வில் – தனக்கென இல்லை, தமிழுக்கு உண்டு!

ஒருமுறை ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையை அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு அழைத்துச்சென்று கௌரவிக்கச் செய்தார். அப்போது ராஜா அண்ணாமலை செட்டியார், கவிமணியை பல விதமாகப் பாராட்டி இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு ஒரு காசோலை அளித்தார்.

கவிமணி அதை எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் டி.கே. சிதம்பரநாதரும் தமிழ் அன்பர்களுமாகச் சேர்ந்து அந்தப் பணத்திற்கு வீட்டிற்குத் தேவையான வெள்ளிப் பாத்திரங்களை வாங்கிச் சென்று அவர் வீட்டிற்குப் போய் கௌரவித்துப் பரிசளித்துள்ளார்கள்.

தமிழை வைத்து நான் சம்பாதிக்க விரும்பவில்லை. எனவே எனக்கு இவை வேண்டாம்” என்று கவிமணி மறுத்தார்.

நண்பர்கள் வலுக்கட்டாயமாக அவற்றை அங்கேயே விட்டுச் சென்றனர். அவர்கள் போனதும் கவிமணி தனக்கு வந்த இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் மதிப்பிற்கு ஒரு காசோலை எழுதி கேரளாவில் ஒரு கல்லூரியின் தமிழ்ப் படிப்பு நிதிக்காக அனுப்பி வைத்தார்.

எத்தனையோ மகான்கள்  இந்த ஞான பூமியில்

அத்தனை பேருக்கும்  நமது வணக்கங்கள்