எங்கோ நடப்பதல்ல, எங்கும் நடக்கும்

கோயிலுக்குச் சாமி கும்பிடச் சென்ற யாத்ரீகர்கள் 6 பெண்கள் உட்பட 7 பேரை முஸ்லிம் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். பக்தர்கள் செய்த பாவம் என்ன? ஹிந்துவாக பிறந்தது தான் பாவமா?

அவர்கள் அமர்நாத் பணிலிங்கக் கோயிலை வழிபடச் சென்றார்கள். இமயமலையில் 17,000 அடி உயரத்தில் உள்ள அந்த லிங்கத்தை தரிசிப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை. கடுமையான குளிர். இந்த ஆண்டு யாத்திரை தொடங்கிய 12வது நாளில் காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தில் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவுடன் செயல்படும் லஷ்கர் – இ – தொய்பா என்ற பயங்கரவாத அமைப்புதான் காரணம். இந்த லஷ்கர் – இ – தொய்பாதான் 2008ல் மும்பையில் தாக்குதல் நடத்தி 166 பேரை சுட்டுக் கொன்றது. காஷ்மீரை எப்படியாவது இந்தியாவிலிருந்து பிரித்துவிட வேண்டும் என்பதற்காக நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்வளவெல்லாம் நடக்கிறது. தமிழக டிவி சேனல் ஒன்றுகூட இதுபற்றி விவாதம் நடத்தவில்லை. செத்தவர்கள் ஹிந்துக்கள் தானே என்பதால் இளப்பமா?

ஜிகாதிகள் இத்தகைய கொடூரங்களில் ஈடுபடுவதற்கு அவர்களின் குரான்தான் காரணம். முஸ்லிம்கள் அல்லாதவர்களை ‘காபிர்’ என்றே அழைக்கின்றனர். மாற்று மதத்தவரை தங்கள் மதத்தில் சேர்க்க ஜிகாத்தில் (புனிதப்போர்) ஈடுபடுகின்றனர். ஒன்று மதம் மாற்றவேண்டும்; இல்லையென்றால் அவர்களை கொன்று குவிக்கவேண்டும். அல்லா ஒருவரே கடவுள். அவரைத் தவிர மற்றைய தெய்வங்களை வணங்குகிறவர்கள் பாவிகள் என்றே அழைக்கின்றனர்.

இன்று முஸ்லிம் பயங்கரவாதம் என்பது உலகிற்கே சவால் விடுகிறது. மத்தியில் நடப்பது மோடியின் ஆட்சி. இவர்களின் செயல்களுக்கு வட்டியும் முதலுமாக பாரதம் பதிலடி கொடுத்தே தீரும்.

பக்தர்களை படுகொலை செய்பவர்கள் இருப்பது எங்கோ அல்ல. எங்கு வேண்டுமானாலும்.  உஷார்!