பரதன் பதில்கள்

யாரோ ஒருவன் சொன்னதைக் கேட்டு சீதையை காட்டிற்கு அனுப்பியது  சரியா?   

– ஆர். வெள்ளியங்கிரி, திருநெல்வேலி

சீதையை காட்டிற்கு அனுப்பியது சரியா? சரிதான். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர்.

 

* ஜாதி   ஒழியுமா?   

-பி. மாணிக்கம், ஆவடி  

ஒழியாது. ஒழியும் என்று யாராவது சொன்னால் அவர் பொய் சொல்கிறார் என்று பொருள். ஜாதி இருக்கலாம். தப்பில்லை. ஜாதி வெறிதான் கூடாது. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்கிற தீண்டாமை உணர்வு மண்ணோடு மண்ணாக   மறைய   வேண்டும்.

 

ஜி.எஸ்.டி – நல்ல  திட்டமா?   

-வெ. பிரித்தீஸ்வரன், வேலூர்

ஒரு திட்டம் நல்லதா, கெட்டதா என்பதைக் கண்டு பிடிக்க ராஜாஜி ஒரு எளிமையான வழியைச் சொல்லியிருக்கிறார். கம்யூனிஸ்டுகள் ஏதாவது ஒரு திட்டத்தை எதிர்த்தால் அந்த திட்டம் நல்லது என்று எடுத்துக் கொள்ளவேண்டும். அந்தப் பட்டியலில் இப்போது காங்கிரசையும் திமுகவையும் சேர்த்துக் கொள்ளலாம்.

 

சாதாரண மக்கள் விரும்பி சாப்பிடும் கடலை மிட்டாய்க்குக் கூட 18 சதவீதம் வரி என்பது அதிகம்தானே?   

– மா. கிருத்திகா, விழுப்புரம்

20 லட்சம் ரூபாய் வரை வியாபாரம் செய்பவர்களுக்கு வரி கிடையாதே! அதுசரி, கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் கடலைமிட்டாய் கம்பெனி வரி கட்டினால் என்ன?

 

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் பற்றி?   

– கி. பழனிச்சாமி, அந்தியூர்

‘இதுவரை இந்திய பிரதமர் யாரும் இஸ்ரேல் சென்றதில்லை. காரணம் முஸ்லீம் நாடுகளை பகைக்க வேண்டியிருக்குமே என்ற பயம்தான். மோடிக்கு அதை எப்படி சமாளிப்பது என்பது தெரியும். அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஆயிரம் அர்த்தம் இருக்கும்.

 

*  நம்மைவிட ராணுவ ரீதியாக வலிமையான சீனா நம் மீது படையெடுத்தால்? 

– ப.சரண்யா, திருவேற்காடு  

இஸ்ரேலை சுற்றியுள்ள ஏராளமான முஸ்லிம் நாடுகள் உலகின் வரைபடத்திலிருந்து இஸ்ரேலை இல்லாமல் ஆக்குவோம் என்று கர்ஜித்தன. ஆனால் என்ன ஆச்சு? இஸ்ரேலை அசைக்க முடியவில்லை. அதற்கு அந்த நாட்டு மக்களின் தேசபக்தி தான் காரணம். நாமும் யாருக்கும் சளைத்தவர்கள்  இல்லை.

 

ஸ்டாலின் ரம்ஜானை முன்னிட்டு, இஸ்லாமிய மக்களுக்கு செய்த நலத்திட்ட உதவிகள் பற்றி? 

– ச. தனசேகரன், காரைக்குடி  

‘அதென்ன இஸ்லாமிய மக்களுக்கு மட்டும்?… தீபாவளி, பொங்கல்  மறந்து  விடுவது  ஏன்?