இஸ்லாமிய இருளில் தெய்வத் தமிழகம்

இஸ்லாமிய படையெடுப்பால் தமிழக கோயில்கள் எப்படி சின்னாபின்னமாக்கப்பட்டன, மக்கள் எப்படி அல்லல் பட்டனர் என்பதை விவரிக்கிறது ‘இஸ்லாமிய இருளில் தெவத் தமிழகம்’. 14ம் நூற்றாண்டில் தமிழகத்தின் வரலாற்றைப் பதிவு செகிறது இந்நூல்.

இஸ்லாமிய படையெடுப்பாளர்களுக்கு பயந்து கோயில்களை மூடி, விக்ரகங்களை  ஏரிகள், கிணறுகள், குளங்களில் மக்கள் பாதுகாத்துள்ளனர்.  ஹொசாள மன்னர் வீரவல்லான் போன்றோரோ வீர சாகசங்கள் செதுள்ளனர். 80 வயதான அவரை தந்திரமாக கைது செது உயிரோடு தோலை உரித்து அத்தோலில் வைக்கோலை அடைந்து மதுரை நகரத்தின் மத்தியில் தொங்க விட்ட செதி நெஞ்சை உலுக்குகிறது. ஏறத்தாழ 60 ஆண்டுகள் (1311-1371) இஸ்லாமிய மதவெறியர்களின் ஆட்சியில் சிக்கிச் சீரழிந்த தமிழகத்தை மீட்டெடுத்தார் கம்பண்ண உடையார் என படிக்கும்போது சற்று நிம்மதி ஏற்படுகிறது.

கம்பண்ண உடையாருக்கு கனவில் தேவதை தோன்றி, இந்த தெவத் தமிழகத்தை நீ மீட்டு ஹிந்துப் பண்பாட்டை நிலைநிறுத்த வேண்டும். அதனைச் செயவல்ல வீரன் நீதான். இதோ இந்த வாளைப் பெற்றுக்கொள். இந்த வாள் கொண்டு நீ போரிடும்போது எதிரிகள் செத்து மடிவது திண்ணம் என்று கூறி வெள்ளியாலான கைப்பிடியோடு கூடிய கூரிய வாள் ஒன்றை கம்பண்ணனின் கரங்களில் கொடுத்தாள்” கனவு கலைந்து எழுந்த கம்பணன் அருகே வாள் இருந்துள்ளது. இந்த வாளைக் கொண்டே மதுரையை அடைந்து முஸ்லிம்களுடன் போரிட்டு மிலேச்சர்களின் காக்கை கொடியை வீழ்த்தினார் என்ற செதியைப் படிக்கும்போது ஒரு உத்வேகம் பிறக்கிறது.

தமிழகத்தின் இருண்ட காலத்தையும் அது மீண்டும் புத்தெழுச்சி பெற்றதையும் இந்நூலில் ஆர்.பி.வி.எஸ். மணியன், அவருக்கே உரிய பாணியில் சிறப்பாக விளக்கியுள்ளார்.

நூல்: இஸ்லாமிய இருளில் தெய்வத் தமிழகம்

படைப்பு: ஆர்.பி.வி.எஸ். மணியன்

பக்கங்கள்: 80. விலை: ரூ. 50

வெளியீடு: ஹிந்து சிந்தனை மையம், சென்னை – 17

அலைபேசி எண்: 7598819490