நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்

இந்த நூலின் ஆசிரியர்  நடராஜன்  தனது  மாணவப்  பருவ அனுபவம்,  தான்  ஆசிரியராகப்  பணி புரிந்த  அனுபவங்கள்,  ‘த ஹிந்து’ பத்திரிகையில்  வேலை  செய்த  விவரம் இவற்றைத் திறம்பட  எடுத்துரைத்திருக்கிறார்.  அவரது  அனுபவங்களை இன்றைய  மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டும்.  அது அவர்களுக்கு  நிச்சயம் பாடமாக  அமையும்.  கண் திறக்கும்.  அன்றைய மாணவ, ஆசிரிய  சமுதாயம்  – இன்றைய  மாணவ, ஆசிரிய சமுதாயம்  ஓர் ஒப்பீடு செய்து நோக்கினால்  அது மலைக்கும்  மடுவிற்கும் உள்ள  வித்தியாசம். இந்த நூலைப் படிக்கும் போது அது  நன்கு தெரிகிறது.  இந்த நூல் ஆசிரியரின் ஆசிரியர்களைப் பற்றிப் படிக்கும் போது  ஒரு பெருமித உணர்வு ஏற்படுகின்றது  பல முன்மாதிரி  ஆசிரியர்கள் பற்றி எழுதியிருக்கிறார்.  ஆசிரியர்  தனது ஆசான்களுடன் குடும்ப நபர் போல்  பழகியிருக்கிறார். இன்றைய  மாணவ சமூகத்தினருக்கும்  அவர்கள்  முன்னுதாரணமானவர்கள்.  அதை  அசை போட்டாலே மனவலிமை  கிடைக்கும்.  ஒவ்வொரு பள்ளி ஆசிரியரும்  மாணவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.    அவர்களது  பிரிவு  அவரை  மிகவும்  வேதனைப்படுத்தியிருக்கின்றது.  கல்வி  நிலையங்களுக்கு  இது  மிகவும்  வரப்பிரசாதமான  நூல்.

பக்கங்கள் : 160   விலை : ரூ 100/-

வெளியீடு : பிரெய்ன் பாங்க் வெளியீடு

போன்: 044 – 2815 1160 / 2432 8238