பட்ஜெட்டில் சில அறிவிப்புகள்

நடப்பு நிடியாண்டுக்கான பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘பிணியின்மை செல்வம்…, ‛இயற்றலும் ஈட்டலும்…’ ஆகிய இரண்டு திருக்குறள்களை மேற்கோள் காட்டி பேசினார். முதன்முறையாக காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் ரூ.140 கோடி சேமிக்கப்படும். கொரோனா நோய் தொற்று காலத்தில் பட்ஜெட் தாக்கல், பொது முடக்கத்தால கடுமையாக பாதிக்கப்பட்ட பொருளாதாரம் போன்ற இக்கட்டான சூழலிலும் ஒரு நல்ல பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.

 

  • ரூ.03 லட்சம் கோடியில் தமிழகத்தில் சாலைத் திட்டங்கள் அமைக்கப்படும்.
  • சென்னையில் 119 கி.மீ மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு.
  • சென்னை உள்ளிட்ட 5 மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்.
  • தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பஜங்கா நிறுவப்படும்.
  • தமிழகத்தில் கடல்பாசியை பதப்படுத்த புதிய வசதி ஏற்படுத்தப்படும்.
  • விவசாய பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை தொடரும்.
  • நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • நடப்பாண்டில் 72 லட்சம் கோடி விவசாய பொருட்கள் கொள்முதல் செய்யப்படும்.
  • நடப்பாண்டில் ரூ.5 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு.
  • சுயசார்பு ஆரோக்கிய திட்டத்திற்கு ரூ.64,180 கோடி ஒதுக்கீடு.
  • நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்துக்கு 41 லட்சம் கோடி ஒதுக்கீடு.
  • உற்பத்தி துறைக்கு ரூ.10 லட்சம் கோடி.
  • கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு.
  • உள்கட்டமைப்பு வசதிகளுக்கு இந்தாண்டு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
  • மூலதன செலவினங்களுக்கு ரூ.45 கோடி ஒதுக்கீடு.
  • மூலதன செலவினங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு.
  • சுகாதாரத்துறைக்கு 137 சதவீதம் அதிகமாக, ரூ.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ரூ.2,217 கோடி ஒதுக்கீடு.
  • ரயில்வே துறை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.10 லட்சம் கோடி.
  • பேருந்து வசதிகள் மேம்பாட்டிற்கு ரூ.18 ஆயிரம் கோடி.
  • வங்கி டெபாசிட் காப்பீடு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிப்பு.
  • அரசு வங்கிகளுக்கு பட்ஜெட்டில் கூடுதல் முதலீடாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு.
  • மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி.
  • கல்வித்துறையில் ஆராய்ச்சிக்கு ரூ.50 ஆயிரம் கோடி.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டுக்கு ரூ.1,500 கோடி.
  • சூரிய ஆற்றல் கழகத்திற்கு ரூ.1,000 கோடி.
  • டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ரூ.3,768 கோடி ஒதுக்கீடு.
  • 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை.
  • ஓய்வூதியம், வட்டியை மட்டும் நம்பியிருந்தால் கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம்.
  • வெளிநாடு வாழ் இந்தியர்கள் பாரதம் திரும்பும்போது, இரட்டை வரி விதிப்பு ரத்து நடவடிக்கை.
  • சிறிய அளவிலான வருமான வரி சச்சரவுகளை தீர்த்துவைக்க புதிய குழு அமைக்கப்படும்.
  • வீட்டுக்கடனில் வட்டிக்கான வருமான வரிச்சலுகை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுகிறது.
  • ரூ.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட்ட வீட்டுக்கடன் வட்டி சலுகை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுகிறது.
  • குறைந்த விலை வீடுகளை வாங்குபவர்களுக்கான வரிச்சலுகை 2022 வரை நீட்டிக்கப்படும்.
  • நாடு முழுவதும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 7,400 புதிய திட்டங்கள்.
  • உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, 3 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு நிதியுதவி.
  • தேசம் முழுவதும் 86 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு.
  • ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படும்.
  • எரிவாயு விநியோக குழாய் திட்டம் மேலும் 100 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
  • 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப் பூங்காக்கள்.
  • 11,500 கி.மீ தூரத்திற்கு புதிய சாலை அமைக்கும் பணிகள் துவக்கம்.
  • மின் விநியோக கட்டமைப்டைப மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.95 லட்சம் கோடி.
  • நாடு முழுவதும் உள்ள அகல ரயில்பாதைகள் 2023க்குள் மின்மயமாகும்.
  • சுகாதாரத்துறைக்கு கடந்த ஆண்டை விட கூடுதலாக 137 சதவீதம் ஒதுக்கீடு.
  • வரும் நிதியாண்டில் 100 சைனிக் பள்ளிகள் துவங்கப்படும்.
  • தங்கத்திற்கு இறக்குமதி வரி 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைப்பு.
  • உயர்கல்வி ஆணையம், செவிலியர்கள் நலன் ஆணையம் போன்றவை அமைக்கப்படும்.
  • ரோபோடிக் துறையை மேம்படுத்த திட்டம்.