ராணுவ புரட்சி

சுதந்திரம் அடைந்தது முதல் 1962, 1988 என இருமுறை ராணுவ ஆட்சியை சந்தித்த மியான்மர் தற்போது மீண்டும் ராணுவ ஆட்சியை சந்திக்கிறது. அங்கு ராணுவம் அரசை கைப்பற்றி ஆளும் கட்சி தலைவர்களை சிறை வைத்தது. அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தல் முறைகேட்டை காரணம் காட்டியுள்ளது ராணுவம். ஆனால் இதன் பின்னால் சீனாவின் கை இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாரதத்திற்கு ஆதரவாக உள்ள நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளின் அரசுகளை  ஆட்டுவிக்க அல்லது கலைத்து தனக்கு ஆதரவானவர்களை ஆட்சியில் அமர்த்த முயற்சித்த சீனா தற்போது மியான்மரிலும் தன் வேலையை காட்ட ஆரம்பித்துள்ளதாகவே சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.