தாய்மண்ணின் புனிதம் காக்க தன்னுயிர் தந்த தியாகி ; மகான்களின் வாழ்வில்

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் வங்கப் பிரிவினைக்குக் காரணமாக இருந்த சர் கர்சன் வில்லி என்ற ஆங்கிலேய அதிகாரியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று வீர சாவர்க்கரும் வவேசு ஐயரும் தீர்மானித்தார்கள். அதற்காக அவர்கள் 22 வயதான madhan-lal-dhingara எனும் இளைஞனை தேர்ந்தெடுத்தார்கள். அவனும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டான். ஆனாலும் கூட அவனது மன உறுதியை பரிசோதித்துப் பார்க்க முடிவெடுத்தனர். வவேசு ஐயர் ஒரு ஊசியை எடுத்து திங்க்ராவின் நகக் கண்ணில் குத்தினார். ரத்தம் பீறிட்டு வந்தது. ஆனால் திங்க்ராவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவ்வளவுதான் சோதனை முடிந்தது. கார்யத்தைச் செயல்படுத்த மதன்லாலிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

லண்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சர் கர்சன் வில்லியை முன் வரிசையில் உட்கார்ந்திருந்த மதன்லால் திங்க்ரா மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துச் சுட்டுக் கொன்றான். கைது செய்யப்பட்ட மதன்லால் திங்க்ராவிற்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மதன்லால் திங்க்ராவின் உறவினர்கள் சிறையில் சந்தித்து, கர்சன் வில்லியைச் சுடும்படி தூண்டியவர்களை காட்டிக் கொடுத்தால் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிவிடலாம் என்று ஆலோசனை கூறினர். ஆனால் திங்க்ரா அதற்கு சம்மதிக்கவில்லை.

வீர சாவர்க்கரும் வவேசு ஐயரும் சிறையில் மதன்லாலைச் சந்தித்தபோது, மதன்லால்… உனக்கு ஏதாவது தேவையா?” என்று கேட்டனர். மதன்லால் திங்க்ரா புன்னகை மாறாமல் சொன்ன பதில்: எனக்கு ஒரு கண்ணாடியும் சீப்பும் கொண்டுவந்து தாருங்கள், நான் தூக்கு மேட்க்கு போகும்போது சரியாக உடை உடுத்தியிருக்கிறேனா? சரியாக தலை வாரியிருக்கிறேனா என்று பார்க்க வேண்டும்” என்றான். மதன்லால், தீர்ப்பை எதிர்த்து கருணை மனு போடவில்லை. தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுங்கள் எனக் கெஞ்சவில்லை. இந்த வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒப்பாரி வைக்கவில்லை. ‘ஆமாம். கடந்த 50 ஆண்டுகளில் 8 கோடி இந்தியர்களைக் கொன்று குவித்திருக்கிற வெள்ளையனுக்கு தண்டனையாக நான்தான் கொன்றேன்’ என்று சொல்லி தூக்குமேடை ஏறினான்.

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்

அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்