நவீன கால புஷ்பக விமானம் ஸ்கிராம்ஜெட்

 பாரத ராக்கெட்டுக்கு இனி

 வானமே ஆயில் டாங்க்!

 ளி மண்டல ஆக்சிஜனை எரிபொருளாக பயன்படுத்தும் புதிய தொழில்நுட்ப ‘ஸ்கிராம்ஜெட் இன்ஜினை’ வெற்றிகரமாக சோதனை செததன் மூலம் இந்திய விண்வெளி ஆராச்சி மையமான, ‘இஸ்ரோ’ விண்வெளி ஆராச்சி துறையில் மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்த ‘ஸ்கிராம்ஜெட்’ ராக்கெட் இன்ஜின் ஏ.டி.வி., எனப்படும் முன்னேறிய தொழில்நுட்பம் உடையது. பொதுவாக ராக்கெட்கள் பறப்பதற்கு தேவையான ஹைட்ரஜன், ஆக்சிஜன் வாயுவை அதன் பக்கவாட்டில் உள்ள கொள்கலன்களில்  நிரப்புவது வழக்கம். இதில் ஹைட்ரஜன் முக்கிய எரிபொருளாகவும் ஆக்சிஜன் அதை ஊக்குவிக்கும் துணைப் பொருளாகவும் பயன்படுத்தப்டுகிறது. ஒரு பொருள் பிரகாசமாக எரியவேண்டும் என்றால் காற்றில் போதுமான அளவு ஆக்சிஜன் இருக்க வேண்டும் என்ற எளிய கோட்பாடுதான் அது.

மேலும், பூமியிலிருந்து 15 கி.மீ உயரத்துக்கு மேலே  ஆக்சிஜன் மிக மிகக் குறைவாகவே இருக்கும், அதை சரிக்கட்டவே  இந்த   கொள்கலன். இந்நிலையில் தான் இந்த ஆக்சிஜன் கொள்கலன்களே இல்லாமல் scramjatவளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனை தேவையான அளவு விரைவாக உறிஞ்சி எரி பொருளாக்கும் தொழில் நுட்பம் ஸ்கிராம்ஜெட் இன்ஜின்களில் பயன்படுத்தப்பட்டு வெற்றிகரமாக சோதனை செயப்பட்டுள்ளது.

இதனால் ராக்கெட்டின் எடை பாதியளவுக்கும் கீழாக குறைந்துவிடும். உதாரணமாக, 400 டன் எடை கொண்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் 85 சதவீத எடை எரிபொருளே. அதிலும் 70 சதவீதம் ஆக்சிஜன் கொள்கலனின் எடையே. எனவே பெரும் எடைக் குறைவு  பொருள்செலவை  பத்து மடங்கு குறைக்கிறது. செயல் வேகம் பலமடங்கு கூடுகிறது. அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை செலுத்த இயலும்.

எரிபொருள் பற்றாக்குறைக்கு வாப்பில்லை என்பதால் ‘ரீ யூசபிள் லாஞ்சிங் வெஹிகிள் (கீஃங)’ எனப்படும் மறுபயன்பாட்டு விண்கலம் உருவாக்கத்தை நோக்கி நாம் விரைவாக பயணிக்கலாம். தற்போதைய நிலையில் ஒரு விண்கலத்தை நாம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் நாம் எதிர்கொள்ளும் பொருள் செலவும் கால விரயமும் அதிகம்.

மேலும், இந்த தொழில்நுட்பத்தை எட்டிய நாடுகளின் வரிசையில்  அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி ஆராச்சி ஏஜன்சி வரிசையில் இந்தியா நான்காவதாக  இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் உலகின் உச்சபட்ச தொழில்நுட்பத்தை எட்டிக் கொண்டிருக்கிறோம். எரிபொருளே இல்லாத இன்ஜின்களை எட்டிவிடும் தூரத்தில் இருக்கிறோம்.

நம் புராணங்கள் என்றும் பொயுரைக்காது. ராமாயண கால  புஷ்பக விமானத்தை கேள்விப் பட்டிருப்போம். அதில் சக்தி யுகம் என்ற விமானம்  வானத்திலிருந்தே எரிபொருளை சேமித்துக் கொண்டு பல நாட்கள் பறந்து கொண்டே இருக்கும் திறன் படைத்தது. அதை படைக்கதான் இன்று இந்த உலகம் எத்தனித்துக் கொண்டிருக்கிறது என்பதை உலகத்தார் கேட்க உரக்க கூறுவோம்.