ஒரு கருத்தரங்கின் அறைகூவல் சமுதாயக்கடலில் மின்வலை வீசுங்கள்”

பாரதிய கலாசார சமிதியும் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனமும் இணைந்து திறமை, வேலை, தொழிலை இன்டர்நெட்டில் பிரபலப்படுத்த” எனும் கருத்தரங்கு நிகழ்ச்சி ஆகஸ்ட் 28, 2016 அன்று விஜயபாரதம் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தனித்திறமை படைத்தவர்களும் தன்னார்வலர்களும் பங்கேற்றனர்.

விஜயபாரதம் தேசிய வார இதழ் ஆசிரியர் ம. வீரபாகு பேசுகையில், விஜயபாரதம் வார இதழ் இதழியல் பயிற்சி comker-kerஅளிக்கிறது. டிடிபி சொல்லித் தருகிறது. 3வது தளத்தில் உள்ள சமஸ்கிருத பாரதி, சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்கிறது. தையல், கம்ப்யூட்டர், யோகா முதலியவற்றை 2வது தளத்தில் உள்ள சேவாபாரதி அமைப்பு இலவசமாக கற்றுத் தருகிறது என்று கூறினார்.

என்.ஐ.டி முன்னாள் விரிவுரையாளர் பூமாகுமாரி, ஒரு வேலை செய்யும்போது, தொழில் தொடங்கும்போது நாம் எவ்வாறு நடக்க வேண்டும், எவ்வாறு நடக்கக்கூடாது என்பது பற்றியும் அதன் மூலம் வரும் பிரச்சினைகள் பற்றியும் வரும் பிரச்சினைகளை சரிசெய்யும் முறை பற்றியும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்.

அதன்பின், காம்கேர் கே.புவனேஸ்வரி சாஃப்ட்வேர் பற்றியும் இன்டர்நெட்டில் நாம் பயன்படுத்தும் பேஸ்புக், யூ-டியூப், டிவிட்டர் மூலம் தங்கள் திறமை, வேலை, தொழிலை எவ்வாறு பிரபலப்படுத்துவது என்பது பற்றியும் கூறினார். அதன்பின் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.