சூரியனைப் பார்த்து குரைக்கலாமா?

ஐக்கிய ஜனதா தளம் அதிருப்தி தலைவர் சரத்யாதவ் சமீபத்தில் பிகாரில் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அதில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். ராகுல் காந்தி தனது பேச்சில் ஆர்.எஸ்.எஸ் மீது புழுதி வாரி இறைத்துள்ளார். சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பங்கேற்கவில்லை என்பதாகக் குற்றம் சுமத்தினார்.
இத்தாலி சோனியாவின் செல்லப்பிள்ளை ராகுலுக்கு பாரத சுதந்திரப் போராட்ட வரலாறும் தெரியாது; ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்தும் எதுவும் தெரியாது.
ஆர்.எஸ்.எஸ்ஸை துவக்கியவர் டாக்டர் ஹெட்கேவார். அவர் சுயராஜ்யம் எங்கள் பிறப்புரிமை என்று முழக்கமிட்ட பால கங்காதர திலகரை தனது குருவாக ஏற்றுக் கொண்டவர். திலகர் தலைமையில் நாகபுரியில் காங்கிரசின் வருடாந்திர மாநாடு நடைபெறுவதாக இருந்தது. திடீரென்று திலகர் காலமாகி விட்டதால் அந்த மாநாட்டின் தொண்டர்படை பொறுப்பேற்று டாக்டர் ஹெட்கேவார் வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.
1921ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குகொண்டு கைதாகி ஓராண்டு கடுங்காவல் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்தார். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு தான் ஆர்.எஸ்.எஸ்ஸை 1925ல் துவக்கினார்.
அடுத்து மகாத்மா காந்திஜி துவக்கிய உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்துகொண்டு அகோலா சிறையில் 9 மாதம் கடுங்காவல் தண்டனை அனுபவித்தார். ஆர்.எஸ்.எஸ்ஸின் ஏராளமான தொண்டர்கள் சுதந்திரப் போராட்டத்தின்போது சிறைகளில் பல கொடுமைகளை அனுபவித்துள்ளனர். சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒன்றும் பிரம்மாண்டமான அமைப்பு அல்ல. அப்போதுதான் படிப்படியாக பல மாநிலங்களில் அடியெடுத்து வைத்து வந்தது. ஆர்.எஸ்.எஸ்ஸின் ஒரே தாரக மந்திரம் ‘பாரத் மாதா கீ ஜே’ தான். தேசபக்தியில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. சுதந்திரப் போராட்டத்தில் தலைமை வகித்த காங்கிரசுக்கும் இன்றைய சோனியாவின் காங்கிரசுக்கும் ஒருவித சம்மந்தமும் கிடையாது. அன்று காந்திஜியின் முழக்கமாக சுதேசியே பிரதானமாக இருந்தது. இன்று காங்கிரசின் அகில இந்திய தலைவர் கூட சுதேசி இல்லை என்பது வெட்கக்கேடு.
ஊழலில் ஊறித் திளைத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பற்றி விமர்சிக்க யோக்கியதை கிடையாது.