சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இந்தியாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை – காஷ்மீர் குறித்து பாக். வழக்கறிஞர் கருத்து

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அண்மையில் ரத்து செய்யப்பட் டது. இதுகுறித்து விவாதிக்க பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் அண்மையில் நடைபெற் றது. அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் பேசியபோது, ‘‘காஷ்மீர் இனப் படுகொலை தொடர்பாக ஐ.நா. சபையிலும் சர்வதேச நீதி மன்றத்திலும் முறையிடுவேன்’’ என்று தெரிவித்தார்.

இதன்படி காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. சபை, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிடம் பாகிஸ்தான் புகார் செய்தது. ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட ஐ.நா. சபையும் வல்லரசு நாடுகளும் திட்டவட்டமாக மறுத்து விட்டன. இதைத் தொடர்ந்து நெதர் லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக இம்ரான் கான் கூறி வருகிறார்.

இதுகுறித்து பாகிஸ்தானின் சர்வதேச நீதிமன்ற வழக்கறிஞர் கவார் குரேஷி, ‘‘1948 இனப் படுகொலை உடன்படிக்கை யில் இந்தியாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டுள்ளன. இந்த அடிப்படையில் காஷ்மீர் படு கொலை குற்றச்சாட்டு குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். ஆனால் இந்தி யாவுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை. இனப் படுகொலை குற்றச் சாட்டை நிரூபிப்பது மிகவும் கடி னம். இந்த விவகாரத்தில் சர்வ தேச நீதிமன்றத்தில் நிச்சயமாக வழக்கு தொடர முடியாது’’ என்றார்.