ஆறுமுகப் பெருமானுக்கு ஏது அமைதியான உறக்கம்?

கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர். ராதாவும் வந்திருந்தார்.

இருவரும் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே எம்.ஆர். ராதா தனது வழக்கமான கிண்டலுடன் சாமி முருகனுக்கு ஆறு தலை என்கிறார்கள். அவர் ராத்திரி தூங்கும்போது எப்படி ஒரு பக்கமாக படுப்பாரு?”. கூடியிருந்தவர்கள் அனைவரும் சிரிக்க வாரியாருடன் வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள்.

வாரியார் புன்சிரிப்புடன் திருமண ஏற்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்த மணமக்களின் தந்தையார்களை அழைத்து அவர்களிடம் கேட்டார்: நேற்று இரவு தூங்கினீர்களா?”

அவர்கள் இருவரும் இன்னைக்கு கல்யாணத்த வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது?” என்றார்கள். வாரியார் ராதாவைப் பார்த்துச் சொன்னார்: ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச இவர்களுக்கேத் தூக்கம் வரவில்லை. உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அப்படி இருக்கும்போது எப்படித் தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு நேரம் ஏது?” என்றார்.

நாத்திகத்திற்கு வாரியார் கொடுத்த சாட்டையடி!

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்

அத்தனை பேருக்கும்  நமது வணக்கங்கள்