பரதன் பதில்கள்

பரதனாரே… சக்தி  வாய்ந்த  ராம  மந்திரம்  எது?     

பஞ்ச தர்மா, வெள்ளாளப்பட்டி, சேலம் 

ராம மந்திரம் எல்லாமே சக்தி வாய்ந்ததுதான். ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே”- விஸ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ அது இந்த மந்திரத்தைச் சொன்னாலே கிடைக்கும்.

 

தெய்வம்  நின்று  கொல்லும்  என்பது  ஏன்?   

– ஆர். சிவபிரசாத், பெங்களூரு

மனிதன் செய்யும் தவறுகளுக்கு கடவுள் அப்போதைக்கப்போதே தண்டனை கொடுக்க ஆரம்பித்தால்  உலகில்  ஒரு  மனிதனும்  இருக்க  மாட்டான்.

 

தமிழகத்தில்  நவோதயா  பள்ளி  துவங்க எதிர்ப்பு  ஏன்?    

– கனகா குமார், நெய்வேலி

ஹிந்தி நுழைந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள். நவோதயா பள்ளியில் கல்வி, உறைவிடம் எல்லாமே இலவசம். ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இவ்வளவுக்குப் பிறகும் எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள்.

 

ஏசு  மூன்றாவது  நாள்  உயிர்த்தெழுந்தார்  என்பது  உண்மையா?   

– தி. சங்கரன், கோவை

இருக்கலாம். இப்போதும் தேர்தல் வந்தால் பலர் உயிர்த்தெழுந்து ஓட்டுப்போட வரத்தானே செய்கிறார்கள்!

 

லஞ்சம்  –  ஊழல்  என்ன  வித்தியாசம்?       

– வி. பானுமதி, சென்னை 

சாதாரண அரசு ஊழியன் 500 ரூபாய் வாங்கினால் லஞ்சம், அரசியல்வாதிகள் 500 கோடி வாங்கினால் ஊழல். கைதானால் அரசு ஊழியன் அவமானத்தால் முகத்தை மூடிக் கொள்வான். கேடுகெட்ட அரசியல்வாதி கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் இரண்டு விரலை உயர்த்திக் காட்டுவான்.

 

வேலூர்  சி.எம்.சி  மருத்துவக்  கல்லூரி  ‘நீட்’ தேர்வுக்கு  எதிர்ப்பு  தெரிவித்திருப்பது  பற்றி?    

– நர்மதா, ஸ்ரீவில்லிபுத்தூர்

எந்த முறை இருந்தாலும் அங்கு மலையாள கிறிஸ்தவர்களுக்கே பெரும்பான்மையான இடங்கள்… இது பற்றியெல்லாம் சீமான் வாயே திறக்கலையே? எப்படி திறப்பார்? அவரும் ஒரு கிறிஸ்தவர்தானே..!

 

தாங்கள்  பார்த்த  நல்ல  ஆட்டோ  வாசகம்?   

– சிவபெருமாள், நாமக்கல்

ஓடிப்போய் பயனில்லை; சற்று முன்பே புறப்பட்டிருக்கவேண்டும்.

வாழ்க்கையில் சில வாய்ப்புகள் வரும்;  சில வாய்ப்புகள் வாழ்க்கையே தரும்.