அழியாத செல்வம்

எட்டயபுரம் மகாராஜா சென்னைக்குச் சென்றிருந்தார். அவருடன் பாரதியாரையும்  அழைத்துச் சென்றார்.

ஊருக்குப் போகும் முன்பாக, பாரதியார் தனது மனைவி செல்லம்மாளைக் கூப்பிட்டு, செல்லம்மா, நான் மகாராஜாவுடன் சென்னைக்குப் போகிறேன். வரும்பொழுது உனக்குத் தேவையானதை வாங்கி வருகிறேன்!” என்று கூறிவிட்டுச் சென்றார்.

பத்துப் பதினைந்து தினங்கள் சென்றபின்பு மகாராஜாவும் அவரது பரிவாரங்களும் ஊர் திரும்பி வந்தார்கள்.

பாரதியார் வீட்டு வாசலிலே இரண்டு குதிரை வண்டிகள் வந்து நின்றன. ஒன்றிலே பாரதியார் வந்து இறங்கினார். மற்றொரு குதிரை வண்டியிலோ பலவித மூட்டை முடிச்சுக்கள் நிரம்பி வழிந்தன. செல்லம்மாளுக்கு பரம சந்தோஷமாயிற்று, பாரதியார் வெள்ளிச் சாமான்களும் பட்டுப் புடவைகளும் நிறைய வாங்கி வந்திருப்பார் என்று எதிர்பார்த்தார்.

ஆவலை அடக்க முடியாமல், செல்லம்மாள் மூட்டைகளை அவிழ்க்க ஆரம்பித்தாள்.

ஒவ்வொரு மூட்டையிலும் புத்தகங்கள் – புத்தகங்கள் – புத்தகங்கள்தான். புறநானூறு, அகநானூறு, பதிற்றுப் பத்து, வள்ளுவர், வள்ளலார் – தலை சுழன்றது செல்லம்மாவுக்கு. ராஜா ஐநூறு ரூபாய் கொடுத்தார்!” எனப் பணப்பையை நீட்டினார் பாரதியார். புத்தகங்கள் வாங்கியதுபோக மீதி ரூபாய் பதினைந்து மட்டுமே அதில் மிச்சமிருந்தது.

அழியாத செல்வத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். அழியும் பொருட்களை எண்ணிக் கவலைப்படுகிறாயே!” என்றார் பாரதியார்.

எத்தனையோ மகான்கள்  இந்த ஞான பூமியில்

அத்தனை பேருக்கும்  நமது வணக்கங்கள்