பரதன் பதில்கள்

ஸ்ரீ பகவத் கீதை” உணர்த்துவது என்ன?
– பஞ்ச தர்மா, வெள்ளாளப்பட்டி, சேலம்
என்னைச் சரணடைந்துவிடு… சகலத்தையும் என்னிடம் விட்டுவிடு… நான் பார்த்துக் கொள்கிறேன்” என்கிறார் கிருஷ்ணர்.

 

 

* போராட்டமே வாழ்க்கையாக இருக்கிறதே?
– ராம. சுப. சேவுகன், தேவக்கோட்டை
வலிகளும் வேதனைகளும் கற்றுத்தரும் பாடங்களை சுகங்களும் சௌகரியங்களும் ஒருபோதும் கற்றுத் தருவதில்லை.

 

கிருபானந்தவாரியார் பற்றி உங்கள் கருத்தென்ன?
– ராஜவிலோசினி, திருத்தணி
63 நாயன்மார்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழவில்லை. ஆனால் வாரியாரை நமது காலத்தில் வாழ்ந்த 64-வது நாயன்மாராகப் பார்க்கிறேம். ஈ.வெ.ரா கும்பல் ஒரு பக்கம் நாத்திகப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருந்த காலத்தில், மூலை முடுக்கெல்லாம் சென்று தனது ஆன்மிகப் பிரச்சாரத்தால் நாத்திக பிரச்சாரத்தை நீர்த்துப் போகச் செய்தவர் வாரியார் சுவாமிகள்.

 

 

அதிமுக ஊழல் கட்சி என்கிறாரே கமல்?
– கு. திருப்பதிசாமி, கோவில்பட்டி
‘அப்போ திமுக என்ன பரிசுத்தமான கட்சியா? அதையும் தெளிவுபடுத்தினால் கமல் யோக்கியமானவர்தான்.

 

 

ஒவ்வொரு வருஷமும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு காவல்துறை கெடுபிடிகளை அதிமாக்கிக்கொண்டே போகிறதே?
– எஸ். சங்கரன், விருதாச்சலம்
கொஞ்சநாள் போனால் காவல்துறை அனுமதியின்றி யாரும் பிள்ளையாரைக் கும்பிடக்கூடாது என்று சொன்னாலும் வியப்பதற்கில்லை.

 

 

 

* இரண்டு மாதமாக என் கனவில் கலைஞர் வருகிறார் என்கிறாரே வை.கோ?
– கண்ணகி, ராமநாதபுரம்
இவர்களெல்லாம் பகுத்தறிவுவாதிகள்… திமுகவுடன் கூட்டணி என்று முடிவெடுத்த பிறகு அதற்கான காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.

 

ஒருவேளை தமிழருவி மணியன் சொல்கிறபடி ரஜினி நாளை முதல்வராகி விட்டால்?
ஆர். கணேசன், மதுரை
ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வராகும் தகுதி இல்லை என்பது உறுதியாகிவிடும் ……