பெண் பயணிகளின் பாதுகாப்பு

ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு, ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ஏற்படும் இன்னல்கள், அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது மேலும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரயில்வே அமைச்சம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘சந்தேக நபர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்தல், ரோந்து, ரெயில் நிலையங்களில் அடிப்படை உள்கட்டமைப்பை ஏற்படுத்துவது, கண்காணிப்பு கேமராக்களை நிறுவுவது, ரயில் நிலைய வாகனங்கள் நிறுத்துமிடம், அணுகுசாலைகள், டெப்போக்கள் போன்ற இடங்களில் மின்விளக்கு வசதிகள், ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பாழடைந்த பயன்பாடற்ற கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்துதல், பயணிகள் காத்திருப்பு அறைகளை கண்காணித்தல், ஓடும் ரயில்களில் பாதுகாவலர்கள், இரவு நேர எச்சரிக்கைகள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவம், காவல், சட்ட ஆலோசனை, வழக்கு உதவிகள், உளவியல் ஆலோசனைகள்’ போன்ற பல்வேறு வழிகாட்டுதல்கள் இதில் கூறப்பட்டுள்ளன.