மேற்கு வங்கச் சட்டம் தவறு

மேற்கு வங்க வீட்டமைப்பு தொழில் ஒழுங்குமுறை சட்டமான WB-HIRA- 2017ன் பல விதிமுறைகள், மத்திய அரசின் வீடு வாங்குபவர்களைப் பாதுகாக்கவும், ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகளை அதிகரிக்கவும் உதவும் ‘ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டம்’ RERA – 2016 உடன்  முரண்படுகின்றது. இந்தச் சட்டம், நிறுவன பாதுகாப்பு, வீட்டு உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் இல்லை. பொது நலனுக்காக பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட முக்கிய பாதுகாப்பு விதிமுறைகள் மாநில சட்டத்தில் தவிர்க்கப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிட்டு, இது அரசியலமைப்பிற்கு விரோதமானது என தீர்ப்பளித்தது.