பெங்களூருவில் கொரோனா படுக்கை மோசடி

பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனை படுக்கைகளை ஒதுக்க பி.பி.எம்.பி மாநகராட்சி சார்பாக கொரோனா வார் ரூம் செயல்படுகிறது. இங்கு அழைத்து செய்து எங்கே படுக்கை வசதி இருக்கிறது என தெரிந்து கொண்டு அந்த மருத்துவமனையில் சேர முடியும். இந்நிலையில், பெங்களூர் மருத்துவமனைகளில் படுக்கைக்கள் இருந்தாலும், இல்லை என்கிறார்கள். படுக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். லஞ்சம் வாங்கப்படுகிறது. பல மருத்துவமனைகளில் படுக்கைகள் இருந்தாலும் அதை தர மறுக்கிறார்கள் என பல புகார்கள் வந்தன. இதனை விசாரித்த பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா, ‘இந்த முறைகேட்டிற்கு மாநகராட் வார் ரூமில் பணியாற்றும் சில முஸ்லிம்கள் காரணம்’ என்று கூறி அதற்கு ஆதாரமாக,’மன்சூர் அலி, , தாஹிர் அலிகான், சாதிக் பாஷா, முகமது சயீத் என சுமார் 16 நபர்களின் பெயர்களில் போலியாக அங்கு படுக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளார். இந்தச் சூழலில், இது குறித்து விசாரித்த உதவி ஆணையர் ஹரிஷ் பாண்டே தலைமையிலான பெங்களூரு காவல்துறை, நேத்ராவதி என்ற காங்கிரஸ் கட்சி ஆதரவாளர் மற்றும் அவரது மருமகன் ரோஹித் குமார் ஆகியோர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளநனர். இவர்கள் 20.000  முதல் 40,000 வரை பணம் பெற்று படுக்கைகளை ஒதுக்கினர். அவர்களுக்கு பல வார் ரூம் ஊழியர்கள், தனியார் மருத்துவமனை ஊழியர்கள் உதவியதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.