கோயில்களை விடுவிப்போம்

சத்குரு ஜக்கி வாசுதேவ், கோயில்கள் மீட்பு குறித்து சமீபத்தில் கூறிய சில கருத்துகள்:

இருக்கும் நிலவரத்தை ஆடிட் செய்யுங்கள்.  எனக்கு பா.ஜ.க சாயம் பூசாதீர்கள். அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலத்திலும் கோயில், அரசு கட்டுபாட்டில்தான் இருக்கிறது. அரசுக்கு ஈடுபாடு இல்லாத ஒன்றில் தொடந்து செயல்பட வேண்டாம். பக்தன் தனக்கு சாப்பாடு இல்லை என்றாலும் கோயில் விளக்கு எரியுமாறு பார்த்துக்கொள்வான். இந்திய அரசியல் சாசனத்தின்படி மதம் அரசியலில் தலையிட கூடாது, அரசியல் மதத்தில் தலையிட கூடாது.  தனக்கு கோயில் நிர்வாக திறமை இல்லை என்று அரசே நீதிமன்றத்தில் ஒப்பு கொண்டுள்ளது.  87% மக்கள் தொகையில் கோயில் நிர்வாகம் செய்யும் திறமை, பொறுப்பு, நேர்மை உள்ள சில ஆயிரம் பேர்கள் இல்லை என்று சொல்வது அவர்களை அவமதிப்பதாகும். அப்படி என்றால் அனைத்தையும் சத்குரு நடத்த போறாரா?  இல்லை, ஒரு கமிஷன் அமைத்திடுங்கள்.  கமிஷனில் நீதிமன்றம் நியமித்த ஒரு நீதிபதியும் இருக்கட்டும், பிற அதிகாரிகள் இருக்கட்டும். அவர்கள் இதை நிர்ணயம் செய்யட்டும்.

கோயில்கள் மக்களின் ஆன்மா. அதை விடுவியுங்கள்.