சிக்கும் முதலைகள்

மக்கள் நீதி மைய்யத்தின் மாநில பொருளாளரும் ‘அனிதா டெக்ஸ்காட்’ நிறுவன அதிபருமான சந்திரசேகரனின் வீடு, நிறுவனத்தில் நடைபெற்ற வருமானவரி சோதனையில், முறைகேடு நடந்துள்ளது, வருமான வரி முறையாக செலுத்தவில்லை, பணம் கைப்பற்றப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. இது, ஊழல் இல்லா நேர்மையான ஆட்சி, முறையாக வரி செலுத்த வேண்டும் என கூறிவரும் கமலஹாசனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இவர் எதிர்க்கட்சிகளுக்கும் தேர்தல் செலவுக்கு பெரிய தொகை தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், அவரது நிறுவனத்திடம் இருந்து மூன்றடுக்கு மாஸ்க், என் – 95 மாஸ்க், கொரோனா கவச உடைகள், அம்மா நியூட்ரிஷன் கிட் என ரூ. 450 கோடிக்கும் அதிகமாக பொருட்களை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது. மேலும் பல்வேறு மாநில அரசுகளும் இவரிடம் கொள்முதல் செய்துள்ளன. ஆனால் இவற்றை தயாரிக்க தேவையான உபகரணங்கள், மூலப்பொருட்கள், அதற்கான மில்கள் எதுவும் இவரின் நிறுவனத்துக்குச் சொந்தமாக இல்லை. அனைத்தையும், ‘அவுட்சோர்சிங்’ முறையில் வாங்கியே விற்றுள்ளார். இதில் பலகோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம். பல அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.