தேவை ஒரு கடிவாளம்

தங்கள் கருத்துக்கு உடன்படாததற்காக சமூக ஊடக பயனர்களின் செய்திகளை கடுமையாக தணிக்கை செய்வது, அவர்களின் கணக்கை முடக்குவது, நீக்குவது என பிரபல சமூக ஊடகங்களான ட்விட்டர். முகநூலின் செயல்பாடுகள், மர்மமாகவும் தீவிர இடதுசாரி சித்தாந்தத்துடனும் இருப்பது கண்கூடு.

பாரதத்தை சேர்ந்த பிரஞ்சு பத்திரிகையாளர் பிராங்கோயிஸ் கவுட்டியர். இவரை டிவிட்டரில் பின் தொடர்பவர்கள் 71,000 பேர். இவர் பாரத விவசாய போராட்டத்தில் தலையிட்டு அதன் போக்கை திசை மாற்ற முயன்ற கிரெட்டா துன்பெர்க், திஷா ரவி ஆகியோரை குறித்த சில உண்மைகளை டிவிட்டரில் ட்வீட் செய்தார். இதனால் பிராங்கோயிஸ்ஸின் கணக்கை எவ்வித காரணமும் கூறாமல் டிவிட்டர் நீக்கியுள்ளது. அதேபோல அமோல் என்ற ஒரு நடுநிலையான கார்ட்டூனிஸ்ட்டின் கணக்கும் டிவிட்டரால் இடை நிறுத்தப்பட்டது. இதுபோன்ற உதாரணங்கள் பல்லாயிரம் உள்ளன. இப்படி தான்தோன்றித்தனமாக செயல்படும் சமூக வலைத்தளங்களுக்கு மக்களும் அரசும் ஒரு கடிவாளம் போட வேண்டும்.

எந்த ஒரு கெட்டவனிடமும் ஒரு சில நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். அந்த நல்ல விஷயங்களை முன்னுதாரணமாக தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். அவ்வகையில் இந்த விஷயத்தில் உலகிற்கு, சீனா ஒரு நல்ல முன்னுதாரணமாகத் திகழ்கிறது.