டுவிட்டருக்கு மாற்று ‘கூ’

சமீபத்தில் விவசாய வன்முறை போராட்டம் குறித்த சர்ச்சைக்குரிய கணக்குகளை நீக்க அரசு அறிவுறுத்தியது. ஆயினும் அதற்கு டிவிட்டர் நிர்வாகம் சரியான நடவடிக்கைகளை எடுக்காமல் காலம் தாழ்த்திவருகிறது. இந்நிலையில், டிவிட்டருக்கு மாற்றாக அறிமுகமாகியுள்ள ‘கூ’ செயலியின் பக்கம் மக்களின் பார்வை திரும்பியுள்ளது.

கடந்த ஆண்டு மனத்தின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டி பேசப்பட்ட மைக்ரோ பிளாகிங் செயலிதான் ‘கூ’. கடந்த ஆண்டு ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சுதேசி செயலியில் தற்போது 4.29 லட்சம் பேர் இணைந்துள்ளனர். தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், கப்பல் போக்குவரத்துத்துறை உட்பட பல அரசு அமைப்புகள் இதில் இணைந்துள்ளன. பாரதத்தில் 10 சதவீதம் பேர் மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் தாய்மொழியையே பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு பயன்படும் விதத்தில் இந்த செயலியில் மக்கள் தங்கள் தாய் மொழியில் கருத்துகளை பகிர ஏற்பாடு உள்ளது. இந்த செயலி, ஆத்மநிர்பர் பாரத் செயலி கண்டுபிடிப்பு போட்டியில், சமூக பிரிவில் இரண்டாவது பரிசை வென்றுள்ளது.