பாரதத்திடம் இருந்து கற்க வேண்டும்

அதிகார சிக்கலில் சிக்கி பதவியை இழக்க போகும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சமீபத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், ‘பாரதத்திடம் இருந்து சுயமரியாதையை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எந்த வல்லரசு நாடுகளாலும் பாரதத்திற்கு உத்தரவிடவோ, கட்டாயபடுத்தவோ முடியாது. அதன் வெளியுறவு கொள்கை சுதந்திரமானது. உக்ரைன் ரஷ்ய போரில் எந்த மேற்குலக வல்லரசு நாடுகளாலும் பாரதத்தை அடிபணிய வைக்கமுடியவில்லை. ஆனால், பாகிஸ்தானை ஐரோப்பிய நாடுகள் நச்சரித்து கொண்டே இருந்தன. நான் ரஷ்யாவுக்கு சுற்றுபயணமாக சென்றது அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. தேவையற்ற விஷயங்களில் பாகிஸ்தானை ஈடுபடுத்துவதை நான் விரும்பவில்லை. பாகிஸ்தானுடைய வெளியுறவு கொள்கை முற்றிலும் சுதந்திரமானதாக இருக்க வேண்டும்’ என இம்ரான் கான் தனது உரையில் தெரிவித்துள்ளார். பாரதத்துடன் 1,000 ஆண்டுகளுக்கு போர் செய்வோம். அதனை பல துண்டுகளாக உடைப்போம் எனவும் கங்கணம் கட்டி அலைந்த பாகிஸ்தான் தலைவர் இன்று பாரதத்தை புகழும் நிலையில் இருப்பதை ரசிக்கும் அதிர்ஷடம் நமக்கு ஏற்பட்டுள்ளது என்றால் அதற்கு நமது மத்திய அரசே முழு காரணம் என்றால் மிகையல்ல.