872 சிலைகள் மீட்பு

நமது மத்திய அரசு, அதன் வெளியுறவுத்துறை மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட ஏராளமான பழங்கால சிலைகளை மீட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தவும், பராமரிப்பு பணிகளுக்கும் ரூ. 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்த 10 மாதத்தில் ரூ. 2,500 கோடி மதிப்பு கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தமிழக கோயில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட 872 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 4 சிலைகள் டில்லியில் வைக்கப்பட்டுள்ளது. அவை விரைவில் தமிழகம் கொண்டு வரப்படும்’ என்று கூறினார். ஆனல், அந்த தொன்மையான நமது ஹிந்து கடவுள் சிலைகளை அரும்பாடு பட்டு மீட்டு வந்தது யார் என்பதை மட்டும் சொல்ல மறந்துவிட்டார்.