சிந்திக்கவைக்கும் பதிவு

வழக்கறிஞர் கா. குற்றாலநாதன் வெளியிட்டுள்ள ஒரு சமுக ஊடகப் பதிவில், “மத கோட்பாடுகளை, ஆச்சாரங்களை தாண்டி ஒரு ஹிந்து பெண் சமூகத்தில் சவால்களை வெல்வது போல எத்தனையோ தமிழ் படங்கள் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா நடித்த ‘சூரியகாந்தி’யில் துவங்கி, ரேவதி நடித்த ‘புதுமைப்பெண்’, அமலா நடித்த ‘வேதம் புதிது’, ‘சின்னதாயி’, ரம்யாகிருஷ்ணன் நடித்த ‘சிகரம்’, மணிரத்னம் இயக்கத்தில் ‘இந்திரா’, சமீபத்தில் ஓ.டி.டியில் வெளியான ‘அயலி’ என ஏராளமான படங்கள். ஹிந்து பெண்கள், ஹிந்து மத ஆச்சாரங்களை பழக்கவழக்கங்களை மதகோட்பாடுகளை சமூக கட்டுப்பாடுகளை மீறி, எதிர்த்து போராடி சாதிப்பது போன்ற திரைப்படங்கள் பல வெளியானது. வெளியாகி கொண்டே இருக்கிறது. அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தெரிவித்தாலும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தடை விதிக்கப்படவுமில்லை. மாறாக ஹிந்து திரைப்பட ரசிகர்கள் அது போன்ற சீர்திருத்த கருத்துக்களை வரவேற்றனர்

அதே போல் ஒரு சராசரி இஸ்லாமிய குடும்பத்து பெண் மத கோட்பாடுகளை, ஆச்சாரங்களை தாண்டி சமூகத்தில் சவால்களை வெல்வது போல எடுக்கப்பட்டுள்ள படம் ஃபர்ஹானா. வரும் மே 15ல் திரையரங்கில் வெளியாக உள்ள தமிழ் திரைப்படம். கேரளாவில் ஹிந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் காதல் (லவ்ஜிகாத்) என்ற பெயரில் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு பயங்கரவாத செயலில் ஈடுபட்ட பல சம்பவங்களை கேரள உயர்நீதிமன்றமே கண்டித்துள்ளது. அந்த லவ்ஜிகாத் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் ‘தி கேரளா ஸ்டோரி’. வரும் மே 5ம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் திரையரங்கில் வெளியாக உள்ளது.

கணவன் மரணித்த இஸ்லாமிய பெண்கள் கர்ப்பிணிகள் அல்ல என்றால் 4 மாதங்களும், 10 நாட்களும் இத்தா இருக்க வேண்டும். இந்த காத்திருப்பு காலம் எவ்வளவு பரிதாபமானது என்பதை உணர்த்தும் திரைப்படம் ‘புர்ஹா’ கடந்த வாரம் ஓ.டி.டி’யில் வெளியாகி உள்ளது. இந்த மூன்று படங்களுக்கும்  இஸ்லாமிய அமைப்புகள் பல கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றால், ஹிந்து கலாச்சாரத்தை எதிர்ப்பது என்றால் துள்ளிகுதித்து வரும் பெண்ணுரிமைவாதிகள், கருத்துரிமை போராளிகள் எல்லாம், ஃபர்ஹானா, கேரளா ஸ்டோரி, புர்ஹா ஆகிய படங்களுக்கு எதிர்ப்பு என்றதும் எங்கே போனார்கள்? பயந்து போய் மௌனம் காக்கிறார்களா? ‘பம்பாய்’ திரைப்படத்தில் பர்தாவை கீழே போட்டுவிட்டு ஹிந்து பையனோடு காதலித்து வீட்டை விட்டு செல்வது போல படமெடுத்த இயக்குனர் மணிரத்னம், வீட்டில் முஸ்லீம் அமைப்பினர் பெட்ரோல் குண்டு போட்ட சம்பவம் நினைவிற்கு வருகிறதோ ! என்னவோ !?

இதில் நாம் சிந்திக்க வேண்டியது: இறைவனை விட மத கோட்பாடுகளை விட வேறெதுவும் பெரிதில்லை என்ற முஸ்லிம்களின் சமரசமில்லாத மத உணர்வை நினைத்து அவர்களை பாராட்டுவதா? ஹிந்து தெய்வத்தையே கேலி செய்தாலும் கைதட்டி சிரித்து வேடிக்கை பார்க்கும் ஹிந்துக்களின் உணர்வற்ற தன்மையை நினைத்து வருத்தப்படுவதா?” என கேள்வியெழுப்பி சிந்திக்க வைத்துள்ளார்.