ஊடகத்தினருக்கு பாதுகாப்பில்லை

பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பு மீறப்பட்ட அதே நாளில் ஃபெரோஸ்பூரில் ரிபப்ளிக் டி.வி நிருபர் அனுபமா ஜா சென்ற காரும் தாக்கப்பட்டது. பேரணியை குறித்து செய்தி வெளியிட வந்த அவரின் கார் இரவு 11:30 மணி அளவில் தாக்கப்பட்டது. அந்த வீடியோவை சமூக ஊடகத்தில் அனுபமா பகிர்ந்துள்ளார். ‘பஞ்சாபில் இப்போது பத்திரிகையாளர்கள் கூட பாதுகாப்பாக இல்லை. யாரோ சில மர்ம நபர்கள் கற்களை வீசி எறிந்தனர்.  நானும் எனது காரும் பலத்த காயமடைந்தோம். இதுகுறித்து காங்கிரஸுக்கு ஏதாவது கருத்து இருக்கிறதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க தலைவர் அலோக் அவஸ்தி, ‘பஞ்சாப் மாநிலத்தில் பிரதமரோ அல்லது பத்திரிகையாளரோ யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது’ என்றார். திரைப்பட தயாரிப்பாளர் அசோக் பண்டிட், ‘பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு இயந்திரம் முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. தேச விரோதிகள் இங்கு சுதந்திரமாக உலவுகின்றனர்’ என கூறினார்.