பயங்கரவாதி மிரட்டல்

பஞ்சாபை பாரதத்தில் இருந்து பிரிக்க காலிஸ்தானிகள் தயாராக இருப்பதாகக் கூறி, பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டும் வகையில் ‘சீக் பார் ஜஸ்டிஸ்’ என்ற காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுடனும் பாகிஸ்தானின் உளவு அமைப்புடனும் நெருங்கியத் தொடர்பு உண்டு. அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சுதந்திர காலிஸ்தான் பொது வாக்கெடுப்பு இயக்கம் ஜனவரி 5ம் தேதி தொடங்கியது. பஞ்சாப் மக்கள் சுதந்திரத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கியுள்ளனர். இந்தியர்கள் பஞ்சாபிலிருந்து டெல்லிக்கு தப்பிச் சென்றனர், அதே நேரத்தில் சீக்கியர்கள், பிரதமர் நரேந்திர மோடியை பஞ்சாபிலிருந்து வெளியேற்றினர் என கூறியுள்ளார். மேலும், இந்திரகாந்திக் கொலை குறித்து செய்தி வெளியிட்டு, மத்திய அரசிற்கு மறைமுக அச்சுறுத்தலையும் அளித்துள்ளார்.